< Back
சினிமா செய்திகள்
பிரபல தயாரிப்பாளரின் திருமண விழாவில் கலந்து கொண்ட தனுஷ், நயன்தாரா
சினிமா செய்திகள்

பிரபல தயாரிப்பாளரின் திருமண விழாவில் கலந்து கொண்ட தனுஷ், நயன்தாரா

தினத்தந்தி
|
21 Nov 2024 9:03 PM IST

இட்லி கடை பட தயாரிப்பாளரின் திருமண விழாவில் தனுஷ், அனிருத்,சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தை தயாரித்து வரும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரின் திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் அனிருத், சிவகார்த்திகேயன், நயன்தாரா, தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கடந்த சில தினங்களாக தனுஷ் – நயன்தாரா இருவருக்குமான மோதல்கள் தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதன்படி நயன்தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் பட காட்சிகளை இணைக்க படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி வழங்காத காரணத்தால் நடிகை நயன்தாரா, தனுஷை தாக்கி அறிக்கை ஒன்றிணை வெளியிட்டிருந்தார். அதில் நடிகர் தனுஷ், 3 வினாடி காட்சிக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டதாகவும் தனுஷின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையால் தானும் தனது கணவர் விக்னேஷ் சிவனும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். நயன்தாரா வெளியிட்டிருந்த அந்த அறிக்கைக்கு மலையாள நடிகைகள் பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். சூழல் இப்படி இருக்க தனுஷ் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஆகாஷ் பாஸ்காரனின் திருமண விழாவில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்