ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் ?
|இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
ரங்கூன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. தற்போது இவரது இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நிலையில், இந்த படம் ஒரு சில நாட்களில் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இந்த படம் ரூ. 200 கோடியை வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு அனைத்து மக்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. இயக்குனர் ராஜ்குமார் கூறிய கதை தனுஷுக்கு பிடித்து விட்டதாகவும், விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய இருப்பதாக கூறப்படுகிறது. கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ் தற்போது 'இட்லி கடை' படத்தில் நடித்து இயக்கி வரும் நிலையில், இந்த படத்தின் வேலைகள் முடிந்ததும் அவர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.