< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

சித்தார்த் நடிக்கும் 'மிஸ் யூ ' படத்தின் முதல் பாடல் வெளியீடு

தினத்தந்தி
|
6 July 2024 3:39 PM IST

சித்தார்த் நடிக்கும் 'மிஸ் யூ ' படத்தின் முதல் பாடலான 'தமாதமா' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். பின்னர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஆயுத எழுத்து' திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் தயாரித்து நடித்த சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை ராஜேசகர் இயக்குகிறார். படத்திற்கு 'மிஸ் யூ' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே அதர்வாவின் பட்டத்து அரசன் படத்தில் அறிமுகமாகியிருந்தார். மேலும் கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

படத்தின் முதல் பாடலான 'தமாதமா' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் யாசின் நிசார், குரு ஹரிராஜ் இணைந்து பாடியுள்ளனர்.

மேலும் செய்திகள்