சோகத்தில் தீபிகா படுகோன்- 'கல்கி 2898 ஏடி' படக்குழு வெளியிட்ட புகைப்படம் வைரல்
|தீபிகா படுகோனின் தோற்றத்தை 'கல்கி 2898 ஏடி' படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898 ஏடி'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது. அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரும் வாகனமுமான "புஜ்ஜி" அறிமுகம் ஆனது.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் தீபிகா படுகோன் சோகத்தில் காணப்படுகிறார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் டிரெய்லர், நாளை வெளியாக உள்ளது.