ஆலியா பட், ஐஸ்வர்யாராய், சமந்தாவை முந்தி முதல் இடம் பிடித்த தீபிகா படுகோன் - எதில் தெரியுமா?
|அதிகம் பார்க்கப்பட்ட இந்திய நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
மும்பை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை 6 வருடங்களாக காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தற்போது ரோஹித் ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் 'சிங்கம் அகெய்ன்' படத்தில் தீபிகா நடித்து வருகிறார். இதில் லேடி சிங்கம் சக்தி ஷெட்டியாக நடிக்கிறார் தீபிகா.
இந்நிலையில், அதிகம் பார்க்கப்பட்ட இந்திய நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இது ஜனவரி 2014 முதல் ஏப்ரல் 2024 வரையிலான தரவரிசையின் அடிப்படையில் அமைந்துள்ளது. உலகளவில் 250 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பார்வையாளர்களை கொண்டுள்ளவர்களின் அடிப்படையில் இந்த தரவரிசை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தரவரிசையில் 13-வது இடத்தில் சமந்தா, 4-வது இடத்தில் ஆலியா பட், 3-வது இடத்தில் ஐஸ்வர்யா ராய், 2-வது இடத்தில் ஷாருக்கானும் உள்ளனர். இவர்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி நடிகை தீபிகா படுகோன் முதல் இடத்தைப்பிடித்துள்ளார்.