< Back
சினிமா செய்திகள்
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் - மேலும் ஒருவர் கைது
சினிமா செய்திகள்

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் - மேலும் ஒருவர் கைது

தினத்தந்தி
|
14 Nov 2024 9:44 AM IST

சல்மான் கானிற்கு கொலை மிரட்டல் விடுத்த மேலும் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை,

பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மிரட்டல்காரர்கள் அவரிடம் இருந்து ரூ.5 கோடி கேட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் ஹெல்ப்லைனில் நள்ளிரவில் கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வனவிலங்குகளை வேட்டையாடியதற்காக அவர் எங்கள் பிஷ்னோய் சமூகத்தினர் கோவிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி பணம் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அவரைக் கொன்று விடுவோம் என்று அந்த செய்தியில் கூறியுள்ளார். இதனால் சல்மான் கானுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக புனே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த வாரம் கர்நாடகா மாநிலத்தில் ஹாவேரி மாவட்டத்தில் பிகாராம் பிஷ்னோய் என்பவரை கைது செய்தனர். இந்த நிலையில் கர்நாடகாவில் ராய்சூர் மாவட்டத்தில் சோயில் பாஷா என்ற மேலும் ஒரு நபரை கைது செய்துள்ளனர். கைது செய்த அந்த நபரிடம் இருந்து முழுமையான விசாரணைக்கு பிறகு மிரட்டல் குறித்த பின்னணி தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்