இந்தியாவில் அதிக வசூல்- தோர்: லவ் அண்ட் தண்டரை முந்திய டெட்பூல் & வோல்வரின்
|'டெட்பூல் & வோல்வரின்' பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்துள்ளது.
சென்னை,
மார்வெல் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, அவெஞ்சர்ஸ் படம் அனைவருக்கும் பிடித்த படமாக உள்ளது. அதன்படி தற்போது மார்வெலின், 'டெட்பூல் & வோல்வரின்' என்ற படம் உருவாகியுள்ளது. இது இதற்கு முன்னதாக வந்த டெட்பூல் மற்றும் டெட்பூல் 2 ஆகிய படங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படம் கடந்த மாதம் 26-ந் தேதி இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்து வசூலை அள்ளியுள்ளது. அதன்படி, இப்படம் இந்த வார இறுதியில் ரூ.107 கோடி வசூலித்துள்ளது.
இந்தநிலையில், 'டெட்பூல் & வோல்வரின்' பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்துள்ளது.அதன்படி, இந்தியாவில் அதிகம் வசூலித்த மார்வெல் படங்களின் டாப் 5 பட்டியலுக்குள் நுழைந்திருக்கிறது. இதற்கு முன்னதாக 5-வது இடத்தில் இருந்த தோர்: லவ் அண்ட் தண்டரை முந்தி 'டெட்பூல் & வோல்வரின்' இந்த சாதனையை படைத்துள்ளது.
1. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் - ரூ.373.22 கோடி
2. அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் - ரூ.222.69 கோடி
3. ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் - ரூ.212 கோடி
4. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் -ரூ126.94 கோடி
5. டெட்பூல் & வோல்வரின் -ரூ.107.80 கோடி