< Back
சினிமா செய்திகள்
Coolie: Rajinikanth joined the shooting again?
சினிமா செய்திகள்

'கூலி': மீண்டும் படப்பிடிப்பில் இணைந்த ரஜினிகாந்த்?

தினத்தந்தி
|
22 Oct 2024 12:35 PM IST

கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது.

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 'லியோ' படத்திற்கு பின்னர் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு 'கூலி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், ரஜினியுடன், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

'கூலி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. தற்போது, கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது. இங்கு படத்தின் முக்கிய ஆக்சன் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், 'கூலி' படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினிகாந்திடம் சில வாரங்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில், ஓய்வு முடிந்து தற்போது ரஜினிகாந்த் கூலி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்