< Back
சினிமா செய்திகள்
Coolie: Nagarjuna shares about working under Lokeshs direction
சினிமா செய்திகள்

'கூலி': லோகேஷ் இயக்கத்தில் பணிபுரிவது பற்றி பகிர்ந்த நாகார்ஜுனா

தினத்தந்தி
|
23 Nov 2024 12:32 PM IST

தற்போது கூலி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதில் இவர் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்தநிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடபெற்று வருகிறது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜுடன் பணிபுரிவது குறித்து பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'ஒரு புதிய வடிவிலான பட இயக்கத்தை அவரிடத்தில் நான் பார்க்கிறேன். அந்த புதிய வடிவம் கதாபாத்திர வடிவமைப்பிலும், திரைக்கதையிலும் இருக்கும். அவர் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது ஒரு சுதந்திரம் இருக்கிறது. ஒரு ஹீரோ இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும், வில்லன் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற எந்த விதியும் அவரிடத்தில் கிடையாது' என்றார்.

மேலும் செய்திகள்