< Back
சினிமா செய்திகள்
கூலி படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு
சினிமா செய்திகள்

"கூலி" படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு

தினத்தந்தி
|
14 March 2025 9:18 PM IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ‘கூலி’ படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.


ரஜினி நடிக்கும் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்ட நிலையில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான இன்று கூலி படத்தின் டீசர் அல்லது கிளிம்ஸ் விடியோ வெளியிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில், படப்பிடிப்பில் முக்கிய நடிகர்களுடன் லோகேஷ் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

'கூலி' படத்தில் நடிக்கும் அமீர் கானுக்கும் இன்று பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்