< Back
சினிமா செய்திகள்
Conditional permission to release Kanguva
சினிமா செய்திகள்

'கங்குவா' படத்தை வெளியிட நிபந்தனையுடன் அனுமதி

தினத்தந்தி
|
13 Nov 2024 6:22 PM IST

'கங்குவா' படத்தை நாளை திட்டமிட்டபடி வெளியிட சென்னை ஐகோர்ட்டு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் நாளை வெளியாக உள்ளது. முன்னதாக கங்குவா திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிராக சென்னை ஐக்கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் இன்று சென்னை ஐக்கோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, பியூல் டெக்னாலஜி நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ.1.60 கோடியை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்தி இருக்கிறது. அதேபோல், மற்றொரு வழக்கில் ரூ.6.41 கோடியை செலுத்தியுள்ள நிலையில், மீதி தொகை ரூ. 3.75 கோடியை அடுத்த மாதம் 11-ம் தேதிக்குள் செலுத்துவதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் உறுதி கொடுத்துள்ளது.

இதனையடுத்து, சூர்யாவின் 'கங்குவா' படத்தை நாளை திட்டமிட்டபடி வெளியிட சென்னை ஐகோர்ட்டு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.


மேலும் செய்திகள்