இசையமைப்பாளர் யுவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கிண்டல் பதிவு
|இசையமைப்பாளர் யுவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இவர்கள் தொல்லை தாங்கவில்லை" எனக் கூறி வெங்கட்பிரபு, விஷ்ணுவர்த்தன் கீழே உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
விஜய்யின் 68-வது படமான `கோட்' படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னதாக, விசில் போடு மற்றும் சின்னச் சின்ன கண்கள் ஆகிய இரண்டு பாடல்களைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகஸ்ட் 1 -ம் தேதி கோட் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இது, 3-வது பாடலின் அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
டைரக்டர் விஷ்ணுவர்தன் அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அஜித் நடிப்பில் 'பில்லா' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் "நேசிப்பாயா" படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன் தனது இன்ஸ்டா பக்கத்தில், "இவர்கள் தொல்லை தாங்கவில்லை" எனக் கூறி வெங்கட்பிரபு, விஷ்ணுவர்த்தன் கீழே உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். `கோட்' படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இரு இயக்குனர்களும் அவர்கள் இயக்கும் படங்களின் பாடலுக்காக காத்திருப்பது தெரிகிறது.