< Back
சினிமா செய்திகள்
Cillian Murphy in the new Harry Potter series
சினிமா செய்திகள்

புதிய 'ஹாரி பாட்டர்' தொடரில் சிலியன் மர்பி - எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா?

தினத்தந்தி
|
7 Dec 2024 6:56 PM IST

ஹாரி பாட்டர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

சென்னை,

1997ஆம் ஆண்டு ஜே.கே.ரவுலிங் எழுதிய 'ஹாரி பாட்டர் அண்ட் தி பிளாசபர்ஸ் ஸ்டோன்' புத்தகம் வெளியானது. இந்த புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எழுதினார் ரவுலிங்.

இதனையடுத்து ஹாரி பாட்டர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது புதிய 'ஹாரி பாட்டர்' தொடர் உருவாக உள்ளது. இந்த தொடரின் நடிகர்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

அதன்படி, தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, லார்ட் வோல்ட்மார்ட் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிலியன் மர்பியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், டம்பில்டோர் பாத்திரத்திற்காக மார்க் ரைலன்ஸும் செவெரஸ் ஸ்னேப் பாத்திரத்திற்காக பாப்பா எஸ்ஸீடும் பரிசீலிக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இந்தத் தொடர் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்