< Back
சினிமா செய்திகள்
ஹாலிவுட் இயக்குனர்  கிறிஸ்டோபர் நோலனுக்கு சர் பட்டம்  வழங்கி  கவுரவித்த இங்கிலாந்து மன்னர்
சினிமா செய்திகள்

ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்த இங்கிலாந்து மன்னர்

தினத்தந்தி
|
19 Dec 2024 6:37 PM IST

திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை செலுத்தி வரும் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸுக்கு ‘சர்’ பட்டம் வழங்கி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கவுரவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'ஓப்பன் ஹெய்மர்'. ஓப்பன் ஹெய்மர் கதாபாத்திரத்தில் சிலியன் மர்பி நடித்த இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது படத்தை இயக்கி வருகிறார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரான இவருக்கு அமெரிக்கா தங்கள் நாட்டு குடியுரிமையை வழங்கியுள்ளது. பல்வேறு துறைகளில் சாதனை புரியும் அல்லது நாட்டுக்காக சேவை செய்யும் தனி நபர்களுக்கு இங்கிலாந்து மன்னர் அல்லது ராணியால் 'சர்' பட்டம் வழங்கப்படுகிறது. இயக்குனர் நோலனின் பெரும்பாலான படங்களுக்கு அவரது மனைவி தயாரிப்பாளராக இருந்துள்ளார்.



இந்நிலையில் திரைத்துறையில் இவர்களின் சாதனைகளைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் நோலனுக்கு 'சர் பட்டத்தை' வழங்கியுள்ளார். இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் 'சர்' பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இது தொடர்பாக இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாம்ஸன் 'சர்' பட்டத்தால் கவுரவிக்கப்படுகிறார்கள். 'தி டார்க் நைட்', 'ஓப்பன்ஹைமர்' போன்ற படங்களை இணைந்து தயாரித்து திரையுலகில் சிறப்பான பங்களிப்பை செலுத்தியதற்காக இந்த தம்பதியினருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திப்பின்போது, நோலன் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'ஓப்பன்ஹைமர்' படம் குறித்த தனது பாராட்டை இளவரசர் சார்லஸ் தெரிவித்தார்.

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் 13-வது படம் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி ஐமேக்ஸ் பார்மெட்டில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்