< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
'மார்கோ' படத்தின் ரீமேக்கில் விக்ரம்?

19 Jan 2025 11:44 AM IST
தங்கலானை தொடர்ந்து விக்ரம் நடித்து வரும் படம் வீர தீர சூரன்
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் கடையாக வெளியாகி இருந்த படம் தங்கலான். இப்படம் ரூ. 100 கோடிக்குமேல் வசூலித்தது. இப்படத்தை தொடர்ந்து, விக்ரம் நடித்து வரும் படம் வீர தீர சூரன். விக்ரமின் 62-வது படமான இதில், துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வரும்நிலையில், முதலில் இதன் 2-ம் பாகம் வெளியாகிறது. இந்நிலையில், சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த 'மார்கோ' படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹனீப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்திருந்த இப்படத்தில், யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.