'15 வருடங்களாக கனவு கண்டேன், ஆனால்...' - சிரஞ்சீவி, பிரபாஸ் பற்றி பேசிய ஷங்கர்
|15 வருடங்களாக நிறைவேறாத தனது கனவைப் பற்றி இயக்குனர் ஷங்கர் பேசினார்.
டல்லாஸ்,
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவர் தற்போது ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கி உள்ளார். இதில், ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், தற்போது புரமோஷன் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி அமெரிக்காவின் டல்லாஸில் நடிந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர், தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு மற்றும் பிரபாஸ் படங்களை இயக்க வேண்டும் என்ற தனது நிறைவேறாத கனவைப் பற்றி பேசினார். இது குறித்து அவர் கூறுகையில்,
'மெகாஸ்டார் சிரஞ்சீவியை வைத்து படம் பண்ண வேண்டும் என்று 15 வருடங்களாக கனவு கண்டேன், ஆனால் அது நிறைவேறவில்லை. பின்னர், மகேஷ் பாபுவுடன் இணைய திட்டமிட்டேன், ஆனால் அந்தத் திட்டமும் செயல்படவில்லை. கொரோனா நோய்தொற்று பரவிவந்த நேரத்தில், பிரபாஸுடன் ஒரு படத்தைப் பற்றி பேசினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அதுவும் நிறைவேறவில்லை' என்றார்.