< Back
சினிமா செய்திகள்
நடிகர் சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
சினிமா செய்திகள்

நடிகர் சத்யராஜுக்கு 'கலைஞர் விருது' வழங்கிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

தினத்தந்தி
|
25 Nov 2024 8:35 AM IST

முத்தமிழ்ப் பேரவையின் 50-ம் ஆண்டு பொன்விழாவில் பிரபல நடிகர் சத்யராஜுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் "கலைஞர்" விருது வழங்கி கவுரவித்தார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட முத்தமிழ்ப் பேரவையின் 50-ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம், இசை விழா- விருதுகள் வழங்கும் விழா சென்னை அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடிகர் சத்யராஜுக்கு 'கலைஞர் விருது' வழங்கி கவுரவித்தார்.

பின்னர், மிகவும் தகுதி வாய்ந்த நபருக்கு தான் கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது, திரைப்படத்தில் பெரியாராக வாழ்ந்து காட்டியவர், திராவிடமே தமிழுக்கு அரண் என பேசியவர் சத்யராஜ், தான் நடிகராக ஆனதற்கு கலைஞர் தான் காரணம் என கூறுபவர் சத்யராஜ். இவருக்கு இந்த விருதை வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கலைஞர் விருதை பெற்ற சத்யராஜ் கூறியதாவது, "இதற்கு முன் வில்லனாக நடித்தும், கதாநாயகனாக நடித்தும் பல விருதுகளை கலைஞர் கைகளால் வாங்கியுள்ளேன். ஆனால் அவர் பெயரில் வாங்கும் இந்த விருது எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது என்றார். இந்த விருதை எனக்கு வழங்கிய தளபதி ஸ்டாலினுக்கு நன்றி கூறுகிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்