< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

சம்பாஜி மகாராஜின் வாழ்க்கை படமான "சாவா" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

தினத்தந்தி
|
1 Feb 2025 5:50 PM IST

விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள "சாவா" படம் வருகிற 14ம் தேதி வெளியாக உள்ளது.

ஐதராபாத்,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் 'சாவா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இதில் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். ராஷ்மிகா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 14ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் பாடலான 'ஜானே டு' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல பாடகரான அர்ஜித் சிங் பாடியுள்ளார் பாடலின் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இப்படத்தை லக்ஸ்மன் உதேகர் இயக்கியுள்ளார். இப்படம் 17 ம் நூற்றாண்டில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்