
'சாவா' படம் : ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் வைரல்

ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'சாவா' படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது.
சென்னை,
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலான நிலையில், நாளை டிரெய்லர் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் நடிகர் விக்கி கவுசலின் கதாபாத்திர போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.