< Back
சினிமா செய்திகள்
Chandini Chowdary joins Nandamuri Balakrishna 109th film
சினிமா செய்திகள்

நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 109-வது படத்தில் இணைந்த சாந்தினி சவுத்ரி

தினத்தந்தி
|
25 Oct 2024 12:41 PM IST

கடந்த ஆண்டு வெளியான 'சபாநாயகன்' படத்தில் சாந்தினி சவுத்ரி நடித்திருந்தார்.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது அவரது 109-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்குகிறார்.

எஸ் தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில், பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ஊர்வசி ரவுத்தேலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில், ஏற்கனவே ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ஊர்வசி ரவுத்தேலா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில், இப்படத்தில் கடந்த ஆண்டு தமிழில் வெளியான 'சபாநாயகன்' படத்தில் நடித்த நடிகைகளில் ஒருவரான சாந்தினி சவுத்ரி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்