கார் ரேஸிங்: அஜித்துக்கு வாழ்த்து கூறிய ஷாலினி
|கார் ரேஸிங் அணியை துவங்கியுள்ள அஜித்துக்கு அவரது மனையி ஷாலினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானவர் அஜித்குமார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பைக் ஓட்டுவதிலும் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான்.
சூட்டிங் இல்லாத நேரத்தில் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு ஜாலியாக நண்பர்களுடன் மோட்டார் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்த சூழலில், அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படியனான அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. அது என்னெவென்றால் 'அஜித் கார் ரேஷிங்' என்ற கார் பந்தய அணியை நடிகர் அஜித் தொடங்கியதுதான்.
இந்த அணியின் அதிகாரப்பூர்வ ரேஸிங் ஓட்டுனராக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பேபியன் டபியூ என்பவர் செயல்படுவார் எனவும், ஐரோப்பியாவில் நடைபெறும் 24 எச் கார் பந்தயத்தில் போர்ஷே 992 ஜிடி3 கப் பிரிவில் 'அஜித் குமார் ரேஸிங்' அணி பங்கேற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அஜித்துக்கு அவரது மனையி ஷாலினி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், 'கார் ரேஸிங்கில் மீண்டும் களமிறங்குவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் விரும்புவதை செய்கிறீர்கள். உங்களுக்கும் உங்கள் அணிக்கும் வாழ்த்துகள்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.