அண்ணனுக்கு திருமணம்...- இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் குடும்ப புகைப்படங்கள்
|சமந்தாவின் அண்ணன் திருமணம் விஸ்கான்சின் ஜெனீவா ஏரியில் நடைபெற்றுள்ளது.
ஜெனீவா,
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவருக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் இயக்கத்தில் தற்போது சமந்தா நடித்து முடித்துள்ள 'சிட்டாடல்' தொடர் நவம்பர் மாதம் 7-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. அதனைத்தொடர்ந்து, புதிய வெப் தொடரில் சமந்தா களமிறங்கி இருக்கிறார். இதற்கு 'ரக்த் பிரம்மாண்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்த தொடரின் படப்பிடிப்பை சமந்தா தொடங்கினார்.
இந்நிலையில், சமந்தாவின் அண்ணன் திருமணம் விஸ்கான்சின் ஜெனீவா ஏரியில் நடைபெற்றுள்ளது. இதில் சமந்தா தனது தாய், தந்தை உள்பட குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துகொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களையும் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.