< Back
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ் வசூல்: விரைவில் ரூ.500 கோடி கிளப்பில் இணையும் ரஜினியின் ஜெயிலர்
சினிமா செய்திகள்

பாக்ஸ் ஆபிஸ் வசூல்: விரைவில் ரூ.500 கோடி கிளப்பில் இணையும் ரஜினியின் 'ஜெயிலர்'

தினத்தந்தி
|
18 Aug 2023 3:35 PM IST

2வது வார முடிவில் ஜெயிலர் உலக அளவில் ரூ.500 கோடி வசூல் கிளப்பில் இணையும் என கூறப்படுகிறது.

சென்னை,

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெயிலர் திரைப்பட வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டு இருந்தது. அதில் முதல் வாரம் ஜெயிலர் உலகம் முழுவதும் 375 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

'ஜெயிலர்' திரையரங்குகளில் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்த நிலையிலும் வரவேற்பு குறையவில்லை. இரண்டாவது வாரத்திலும் வசூலை அள்ளுகிறது. தமிழகத்தில் எட்டு நாட்களில் ரூ.235 கோடி வசூலித்து உள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது. ஜெயிலரின் இந்த ஆட்டம் இன்னும் பல நாட்களுக்கு தொடரும் என கூறப்பட்டு உள்ளது. 2வது வார முடிவில் ஜெயிலர் உலக அளவில் ரூ.500 கோடி வசூல் கிளப்பில் இணையும் என கூறப்படுகிறது.




மேலும் செய்திகள்