< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
இன்னும் 4 நாட்களில் பிறந்தநாள்..ரசிகருக்கு ரஜினி கொடுத்த மறக்க முடியாத பரிசு
|7 Dec 2024 9:32 PM IST
ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார் .
சென்னை,
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் வரும் 12- ம் தேதி தனது 74-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அதன்படி, பிறந்தநாளுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளநிலையில், ரசிகர் ஒருவருக்கு மறக்க முடியாத பரிசு ஒன்றை ரஜினி கொடுத்துள்ளார்.
தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த் . சென்னையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், ரசிகர் ஒருவர் ரஜினியை சந்தித்திருக்கிறார். அப்போது ரஜினிக்கு அந்த ரசிகர் கடவுள் ராகவேந்திரா புகைப்படத்தை கொடுத்தநிலையில், ரசிகரின் வலது கையில் ரஜினிகாந்த் அட்டோகிராப் போட்டுள்ளார்.
பின்னர், அது அழியாமல் இருக்க அதே இடத்தில் ரசிகர் பச்சைக்குத்திக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக ரஜினி பட பாடலை இணைத்து அந்த ரசிகர் வீடியோ வெளியிட்டுள்ளார்.