ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் 'பிகில்' பட நடிகை?
|தற்போது கூலி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்தநிலையில், தற்போது சென்னையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில், விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த 'பிகில்' படத்தில் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடித்திருந்த ரெபா மோனிகா நடிப்பது உறுதியாகியுள்ளது. தற்போது 'மழையில் நனைகிறேன்' என்ற படத்தில் ரெபா மோனிகா நடித்து முடித்துள்ளார்.
இப்படம் வருகிற 12-ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. தற்போது, இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அப்போது பேசிய ரெபா மோனிகா 'கூலி' படத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.