< Back
சினிமா செய்திகள்
Bigg Boss Season 8 Promo Released
சினிமா செய்திகள்

'ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு': பிக்பாஸ் 8-வது சீசனின் புரோமோ வெளியானது

தினத்தந்தி
|
11 Sept 2024 9:11 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.

சென்னை,

உலகளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்திய மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. தமிழில் பிரபல தொலைக்காட்சியில் 2016 -ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். வெறும் பொழுதுபோக்கு அம்சத்திற்காக இல்லாமல் பல சினிமா அனுபவங்களையும் புத்தகங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தினார்.

தொகுப்பாளராக கடந்த 7 ஆண்டுகளாக பொறுப்பு வகித்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து, கமல்ஹாசனுக்கு பதில் யார் பிக் பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனையடுத்து பிக் பாஸ் 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முதல் முறையாக விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதால் பிக் பாஸ் 8வது சீசன் மீதான எதிர்பார்பபு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. பிக்பாஸ் 8-வது சீசனின் புரோமோ வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்