< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

பிக் பாஸ் பாலாஜி நடித்த 'பயர்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

தினத்தந்தி
|
6 Dec 2024 6:30 PM IST

பிக் பாஸ் பாலாஜி நடித்த 'பயர்' படத்தின் டிரெய்லரை விஜய்சேதுபதி மற்றும் சூரி இணைந்து வெளியிட்டனர்.

சென்னை,

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றவர் நடிகர் பாலாஜி முருகதாஸ். வீட்டுக்குள் சண்டை போடுவதும், சர்ச்சை கருத்துக்களை கூறுவதும் என அதிகம் விமர்சிக்கப்பட்டவர் பாலாஜி. சீசன் 4 பிக் பாஸில் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்தார். அதன்பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஓ.டி.டி.யில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் பாலாஜி போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். இதிலும் தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி டைட்டில் வின்னர் ஆனார், பாலாஜி முருகதாஸ்.

இவர் தற்பொழுது 'பயர்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கியுள்ளார். இப்படம் 2020ம் ஆண்டு நடந்த நாகர்கோவில் காசி என்ற வழக்கை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. காசி என்பவர் காம பித்து பிடித்தவன். பெண்களை பாலியல் வன் கொடுமை செய்து அதை படம் பிடித்து அவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் ஒரு குணமுடையவன். இக்கதாப்பாத்திரத்தில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளார்.

இவருடன் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்திரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை ஜேஎஸ்கே பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யூடியூபில் 15 லட்ச பார்வைகளை கடந்தது.

தமிழ் திரை உலகில் வெளியான பல திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராக பணியாற்றி, பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரிப்பாளராக இருந்து தயாரித்து தேசிய விருது வென்று, அண்மையில் வெளியான அநீதி மற்றும் வாழை உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராகவும் தன்னுடைய தடத்தை பதித்தவர்தான் இயக்குனர் ஜே.எஸ்.கே சதிஷ் குமார். பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் 'பயர்' திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்த இயக்குனர் , "இன்றைய காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும் அவர்கள் எவ்வாறு அவற்றை கடந்து வருவது என்பது குறித்தும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் அலசும்," என்று கூறினார்.

இந்நிலையில் விஜய்சேதுபதி மற்றும் சூரி இணைந்து அவர்களது எக்ஸ் தளத்தில் 'பயர்' படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.

டிரெய்லர் காட்சிகளில் காசி பெண்களிடம் பொய் சொல்லி அவனது காம ஆசையை தீர்த்துக் கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது மறுபக்கம் காவல் அதிகாரிகள் காசியை தேடி ஒரு பக்கம் அலைகின்றனர். திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அருண் விஜய் நடிக்கும் 36 வது படத்தில் பிக் பாஸ் பாலாஜி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்