ஓடிடியில் வெளியான பாஜே வாயு வேகம், குருவாயூர் அம்பலநடையில்
|யோகி பாபு, குருவாயூர் அம்பலநடையில் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார்.
சென்னை,
நடிகர் பிருதிவிராஜ் நடிப்பில் கடந்த மாதம் 16-ம் தேதி வெளியான படம் குருவாயூர் அம்பலநடையில். 'ஜெய ஜெய ஜெய ஹே' படப்புகழ் விபின் தாஸ் இயக்கியுள்ளார். பாசில் ஜோசப், நிகிலா விமல், அனஸ்வரா ராஜன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யோகி பாபு இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார். துபாயில் வேலை பார்க்கும் நாயகன் கேரளாவில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடனும் அவருடைய அண்ணனுடனும் போனில் தொடர்பு கொண்டு நெருக்கமும் நட்பும் பாராட்டி வருகிறார்.
இந்தநிலையில் எதிர்பா ராதவிதமாக இந்த திருமணம் நிறுத்தப்படுகிறது. இதன்பின்னர் ஏற்படும் நிகழ்வுகளை காமெடி கலந்து சொல்லியுள்ளனர். தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த படம் தமிழில் வெளியாகி உள்ளது.
நடிகர் கார்த்திகேயா, நடிகை ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த மாதம் 31-ம் தேதி வெளியான படம் பாஜே வாயு வேகம். கிரிக்கெட் வீரரான நாயகன் தன்னுடைய அப்பாவின் மருத்துவ செலவுக்காக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏமாறுகிறார்.
எதிரிகளை அழித்து ஏமாற்றப்பட்ட பணத்தை நாயகன் மீட்பது தொடர்பான கதை. தற்போது இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் தெலுங்கில் வெளியாகி உள்ளது.