< Back
சினிமா செய்திகள்
Bagheera movie trailer goes viral
சினிமா செய்திகள்

வைரலாகும் 'பஹீரா' பட டிரெய்லர்

தினத்தந்தி
|
23 Oct 2024 10:03 AM IST

இயக்குனர் பிரசாந்த் நீல் கதை எழுதியுள்ள 'பஹீரா' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

சென்னை,

கே.ஜி.எப், காந்தாரா, சலார் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பஹீரா' இயக்குனர் பிரசாந்த் நீல் கதை எழுத இயக்குனர் சூரி இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி நாயகனாக நடித்துள்ளார். கன்னடாவில் கண்டி உள்ளிட்ட படங்களின் மூலம் மிகவும் கவனம் பெற்ற நடிகராக அறியப்படுகிறார் ஸ்ரீமுரளி. இவர் பிரசாந்த் நீலின் தங்கையை திருமணம் செய்துகொண்டவர். பிரசாந்த் நீலின் முதல் படமான உக்ரம் படத்தின் நாயகனும் இவர்தான்.

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரித்தால் அது சிறப்பான படமாக இருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், வரும் 31ம் தேதி தீபாவளியன்று இப்படம் வெளியாக உள்ளநிலையில், தற்போது இதன் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்