விமர்சனத்திற்குள்ளாகும் கீர்த்தி சுரேஷின் 'பேபி ஜான்' பட போஸ்டர்
|கடந்த 2 தினங்களுக்கு முன்பு 'பேபி ஜான்' படத்தின் டீசர் வெளியானது
சென்னை,
கடந்த 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான 'தெறி' திரைப்படம், தற்போது இந்தியில் 'பேபி ஜான்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார்.
நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு அடுத்த மாதம் 25 -ம் தேதி வெளியாக உள்ளநிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு டீசர் வெளியானது. இது குறித்தான போஸ்டர் இணையத்தில் வைரலானநிலையில், தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
அதன்படி இந்த டீசர் போஸ்டர், கடந்த மாதம் 10-ம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த 'வேட்டையன்' படத்தின் போஸ்டர்போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.