'பாகுபலி': ராஜமவுலியின் முதல் தேர்வு ரம்யா கிருஷ்ணன் அல்ல...இந்த நடிகைதான்
|எஸ்.எஸ்.ராஜமவுலி 'பாகுபலி' படத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்தார்.
சென்னை,
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் போன்ற ஹாலிவுட் ஜாம்பவான்களால் பாராட்டப்பட்ட எஸ்.எஸ்.ராஜமவுலி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவர்'பாகுபலி' படத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்தார்.தென்னிந்திய திரைப்படங்களின் மீதுள்ள பார்வைகளை தனது படங்களின் மூலம் மாற்றியவர் எஸ்.எஸ்.ராஜமவுலி . இன்று இவரது படங்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
ஆனால் அவரது படத்தில் நடிக்க ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை மறுத்திருக்கிறார். இன்று, பல நட்சத்திரங்கள் எஸ்.எஸ்.ராஜமவுலியின் படத்தில் நடிக்க காத்திருக்கிறார்கள், ஆனால் பாலிவுட் நடிகை ஒருவர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். சுமார் 25 ஆண்டுகளாக இந்தி மற்றும் தென்னிந்திய சினிமாவில் பெரும் புகழைப் பெற்ற பாலிவுட் சூப்பர் ஸ்டார் மறைந்த ஸ்ரீதேவியைப் பற்றிதான் நாம் பேசுகிறோம்.
'பாகுபலி' படத்தில் சிவகாமி தேவி வேடத்தில் நடிக்க முதலில் எஸ்.எஸ்.ராஜமவுலி, ஸ்ரீதேவியை அணுகியிருக்கிறார், ஆனால் , சம்பளம் காரணமாக ஸ்ரீதேவி அதில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், பணப் பிரச்சினை காரணமாக 'பாகுபலி' படத்தை நிராகரிக்கவில்லை என்றும் அப்படி நினைத்திருந்தால் கெரியரில் 300 படங்களில் நடித்திருக்க மாட்டேன் என்றும் ஸ்ரீதேவி கூறினார்.
பின்னர் இந்த பாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் தேர்வாகியிருக்கிறார். இப்படம் அவருக்கு மிகப்பெரிய புகழை கொடுத்தது. இப்படம் வசூல் சாதனையும் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.