< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.
ஓடிடியில் வெளியான "அழகிய கண்ணே"
|20 Jun 2024 4:42 PM IST
விஜய்சேதுபதி கேமியோ ரோலில் நடித்து, கடந்த ஆண்டு வெளியான "அழகிய கண்ணே" படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது.
சென்னை,
இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகிய படம் "அழகிய கண்ணே". இப்படத்தில் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்தார். இப்படத்தில், விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.
மேலும் சிங்கம்புலி, ராஜ்கபூர், காதல் சுகுமார், ஆன்டிருவ்ஸ், அமுதவானன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்தார்.
இத்திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் நேற்று பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர்.