மார்வெலில் மீண்டும் இணைவது குறித்து பகிர்ந்த அவெஞ்சர்ஸ் நடிகை
|எலிசபெத் ஓல்சன் மார்வெலில் கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு வெளியான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2 படத்தில் நடித்திருந்தார்.
வாஷிங்டன்,
பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் ஓல்சன். இவர் மார்த்தா மார்சி மே மார்லின் (2011), சைலண்ட் ஹவுஸ் (2011), லிபரல் ஆர்ட்ஸ் (2012), ஓல்ட் பாய் (2013), காட்சில்லா (2014) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து மார்வெலின், வாண்டா மாக்சிமோப் / ஸ்கார்லெட் விட்ச் போன்ற கதாபாத்திரத்தில் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 2021ஆம் ஆண்டு வாண்டாவிஷன் என்ற டிஸ்னி பிளஸ் இணையத் தொடரிலும் நடித்துள்ளார்.
மார்வெலில் இவர் கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு வெளியான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2 படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது கதாபாத்திரம் இறந்துவிடுகிறது. இதனால், எலிசபெத் ஓல்சன் மார்வெல் படங்களில் தோன்றமாட்டார் என கூறப்படுகிறது. இந்நிலையில், மார்வெலில் மீண்டும் இணைவது குறித்து எலிசபெத் ஓல்சன் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'மார்வெல் எனது வாழ்க்கையில் மதிப்புமிக்க பகுதியாக இருக்கிறது. உணமையாகவே அந்த கதாபாத்திரம் படத்திற்கு தேவைப்பட்டால் மீண்டும் நடிக்க தயாராக இருக்கிறேன். அதேபோல, வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதிலும் உறுதியாக உள்ளேன்' என்றார்.