< Back
சினிமா செய்திகள்
Avatar: Fire And Ash Runtime Revealed
சினிமா செய்திகள்

"அவதார்: பயர் அண்ட் ஆஷ்" படத்தின் நீளம் இவ்வளவா? - அப்டேட் கொடுத்த ஜேம்ஸ் கேமரூன்

தினத்தந்தி
|
19 Jan 2025 8:54 AM IST

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது.

கலிபோர்னியா,

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் வெளியானது.

இந்தப்படம் ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியானது. 'அவதார்: தி வே ஆப் வாட்டர்', சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் இது ஒன்றாகும்.

இதனையடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இதற்கு "அவதார்: பயர் அண்ட் ஆஷ்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் நீளம் குறித்து ஜேம்ஸ் கேமரூன் அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, இப்படம் 3 மணிநேரம் 12 நிமிடம் நீளம் கொண்டுள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் கூறி இருக்கிறார்.

மேலும் செய்திகள்