< Back
சினிமா செய்திகள்
ஆசிப் அலி நடித்துள்ள ரேகாசித்திரம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
சினிமா செய்திகள்

ஆசிப் அலி நடித்துள்ள 'ரேகாசித்திரம்' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்

தினத்தந்தி
|
31 Dec 2024 7:14 PM IST

ஆசிப் அலி நடித்துள்ள 'ரேகாசித்திரம்' படம் வருகிற ஜனவரி 9-ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

'கிஷ்கிந்தா காண்டம்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு , நடிகர் ஆசிப் அலி மீண்டும் மற்றொரு திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு 'ரேகாசித்திரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனஸ்வர ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் ஆசிப் அலி 'கூமன் : தி நைட் ரைடர்' மற்றும் 'தளவன்' படங்களுக்கு பிறகு மிண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இந்திரன்ஸ், நிஷாந்த் சாகர், ஜரின் ஷிஹாப், சித்திக் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மம்முட்டி நடித்த 'தி ப்ரீஸ்ட்' படத்தின் மூலம் பிரபலமான ஜோபின் டி சாக்கோ இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலாகின. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்