40 ஆண்டுகளாக ரசிகர்களை சந்தித்துவரும் அமிதாப் பச்சன்
|அமிதாப் பச்சன் 'கல்கி 2898 ஏடி' வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்துள்ளார்.
மும்பை,
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் . இவர் 'பிக் பீ' உள்ளிட்ட செல்லப் பெயர்களால் அழைக்கப்படுகிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியான படம் கல்கி 2898 ஏடி. இந்தப் படம் கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான 4 நாட்களில் உலகளவில் ரூ.550 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அமிதாப் பச்சன் ரசிகர்களை சந்தித்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் தனது ரசிகர்களை 40 ஆண்டுகளாக சந்தித்து வருகிறார். சந்திப்பிற்கு எப்போதும் வெறுங்கால்களுடன்தான் செல்வார். அதன்படி தற்போது தனது ஜல்சா இல்லத்தின் முன்பு ரசிகர்களை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஒருமுறை அவர் தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களை வெறுங்கால்களுடன் சந்திப்பது குறித்து விளக்கினார். அப்போது ரசிகர் ஒருவர் 'யார் வெறும் கால்களுடன் வெளியே செல்கிறார்கள்' என்று பதிவிட்டார். அதற்கு அமிதாப் பச்சன் ' நான் செல்கிறேன். அதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா?. நீங்கள் வெறுங்கால்களோடுதானே கோவிலுக்கு செல்வீர்கள். என் நலம் விரும்பிகள்தான் என் கோவில்' என்று தெரிவித்தார்.