பிறந்தநாளன்று 'சர்தார் 2' படத்தில் இணைந்த கன்னட நடிகை
|முன்னதாக நடிகை மாளவிகா மோகனன் 'சர்தார் 2' படத்தில் இணைந்தார்.
சென்னை,
கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாத். இவர் கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கிரேசி பாய்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான 'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இன்று நடிகை ஆஷிகா ரங்கநாத் தனது 28-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் நடிகை ஆஷிகா ரங்கநாத், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'சர்தார் 2' படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக இப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷிகா ரங்கநாத் தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் 'மிஸ் யூ' படத்திலும், சிரஞ்சீவி, திரிஷா நடித்து வரும் விஸ்வம்பரா படத்திலும் நடித்து வருகிறார்.