< Back
சினிமா செய்திகள்
As Rama? Or Ravana? - Rana Daggubati joins Jai Hanuman
சினிமா செய்திகள்

'ராமரா?, ராவணனா? - 'ஜெய் அனுமான்' படத்தில் இணைந்த ராணா டகுபதி

தினத்தந்தி
|
9 Nov 2024 6:57 PM IST

ரிஷப் ஷெட்டியை தொடர்ந்து பிரசாந்த் வர்மாவின் பி.வி.சி.யுவில் ராணா டகுபதி இணைந்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாரான 'அனுமான்' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்தார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்தார். இந்த படத்தில் வெற்றியைத்தொடர்ந்து, இதன் தொடர்ச்சியாக 'ஜெய் அனுமான்' படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அதன்படி, சமீபத்தில் இந்த படத்தில் காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி அனுமானாக நடிப்பதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ராணா டகுபதி இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படத்தை ராணா டகுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள், 'ராமராக ராணா???', 'அவர் ராமராக நடிக்கிறாரா? என்று சிலரும் ராணா டகுபதி நெகட்டிவ் ரோல்களுக்கு பெயர் போனவர் என்பதால், ஜெய் ஹனுமானில் ராவணனாக அவர் நடிப்பார்??? என்று சிலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதனையடுத்து, பாகுபலி நடிகர் பி.வி.சி.யு-வின் ஒரு பகுதியாக இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.

மேலும் செய்திகள்