'கொம்பன்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் அருள்நிதி
|அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டிமான்டி காலனி 2' மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சென்னை,
அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். 'வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'டிமான்டி காலனி' படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது பம்பர் படத்தின் இயக்குனர் எம். செல்வகுமார் இயக்கத்திலும், தேன் படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் இவர் தற்போது மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கொம்பன் படத்தினை இயக்கிய முத்தையா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இவர்களது கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் அருள்நிதி பாக்ஸராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.