< Back
சினிமா செய்திகள்
மகளின் திருமணம் குறித்து நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்த நடிகர் அர்ஜுன்
சினிமா செய்திகள்

மகளின் திருமணம் குறித்து நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்த நடிகர் அர்ஜுன்

தினத்தந்தி
|
15 Jun 2024 3:29 PM IST

தனது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம் குறித்து நடிகர் அர்ஜுன் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா 'பட்டத்து யானை' என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னட மொழிகளில் வெளியான 'சொல்லி விடவா' படத்திலும் நடித்து இருந்தார்.

குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, சேரன் இயக்கிய திருமணம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானவர் உமாபதி. நிகழ்ச்சியில் உமாபதியின் நற்குணம் அர்ஜுனுக்குப் பிடித்துப் போக தனது வீட்டு மாப்பிள்ளையாக பச்சைக் கொடி காட்டினார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த 10-ம் தேதி கெருகம்பாக்கத்தில் நடிகர் அர்ஜுன் கட்டியுள்ள ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், நடிகர் அர்ஜுன் நடந்து முடிந்த தனது மகள் திருமணம் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது, "எங்கள் அன்பு மகள் ஐஸ்வர்யா தனது வாழ்க்கையின் காதல் உமாபதியை திருமணம் முடித்துள்ளார், அந்த தருணத்தின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. காதல், சிரிப்பு, பல அழகான நினைவுகள் நிறைந்த மறக்கமுடியாத நாள் அது. உனது வாழ்க்கையின் அடுத்தகட்டத்துக்கு நீ செல்வதை பார்க்கும் போது பெருமையாகவும், உணர்ச்சிமிக்க தருணமாகவும் உள்ளது.

உங்கள் காதலை போலவே உங்க வாழ்க்கையும் சிறப்பு, ஆசிர்வாதம் மற்றும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கட்டும் என்று தனது மகள் திருமணத்திற்கு நெகிழ்ச்சி கலந்த மகிழ்வான வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார் நடிகர் அர்ஜுன். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்