< Back
சினிமா செய்திகள்
Arjun Kapoor shares 1st cryptic post amid breakup rumours with Malaika Arora: ‘We can be prisoners of our past or…’
சினிமா செய்திகள்

50 வயது காதலியை பிரிந்ததாக பரவிய வதந்தி - அர்ஜுன் கபூரின் பதிவு வைரல்

தினத்தந்தி
|
2 Jun 2024 7:31 AM IST

சமீபத்தில் அர்ஜுன் கபூர்-மலைகா அரோரா பிரிய முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மும்பை,

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், பிரபல தயாரிப்பாளராக இருக்கிறார். இவரது மகள் ஜான்வி கபூர், பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

போனிகபூரின் மகன் அர்ஜுன் கபூரும் நடிகராக இருக்கிறார். இவரும், நடிகை மலைகா அரோராவும் பல வருடங்களாகவே காதலித்து வந்தனர். 50 வயதாகும் மலைகா அரோரா, அர்ஜுன் கபூரை விட 12 வயது பெரியவர் ஆவார்.

ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான மலைகாவுக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் காதலுக்கு போனி கபூர் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் வந்தபோதிலும், இந்த ஜோடி உறுதியாகவே இருக்கிறார்கள். பல இடங்களிலும் ஒன்றாகவும் சுற்றி திரிந்தனர்.

சமீபத்தில் அர்ஜுன் கபூர்-மலைகா அரோரா பிரிய முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. பிரிவு குறித்து இருவருமே வெளிப்படையாக அறிவிக்க போவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அர்ஜுன் கபூர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர்,

'வாழ்க்கையில் நமக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. நாம் நமது கடந்த காலத்தின் கைதிகளாகவோ அல்லது எதிர்கால சாத்தியக்கூறுகளை ஆராய்வோராகவோ இருக்கலாம்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்