அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'பாம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
|அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'பாம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார்.அர்ஜுன் தாஸ் நடித்த போர், ரசவாதி படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
அடுத்ததாக தமிழில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக இருக்கிறது.சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்தப் புதிய படத்துக்கு 'பாம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. .சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் நாயகியாக சிவாத்மிகா நடிக்கிறார். இவர்களுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் காளி வெங்கட் நடிக்கிறார்.