< Back
சினிமா செய்திகள்
Arjun Das penned an emotional note on how he finally gets to share screen space with Ajith Kumar
சினிமா செய்திகள்

'குட் பேட் அக்லி': அஜித்துடன் இணைந்தது குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட அர்ஜுன் தாஸ்

தினத்தந்தி
|
26 Oct 2024 7:16 AM IST

'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்துடன் இணைந்தது குறித்து அர்ஜுன்தாஸ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்தது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் நடிகர் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், நடிகர் அர்ஜுன்தாஸும் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானநிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. அதன்படி அர்ஜுன்தாஸ், அஜித்துடன் இணைந்தது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'அஜித் சாருடன் இறுதியாக இணைந்ததில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். இது அன் கனவு நனவான தருணம். அஜித் சாருக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என நம்புகிறேன். அஜித் சாருடன் எப்போது படம் பண்ணுவீர்கள் என்று எப்போதும் என்னிடம் கேட்கும் அஜீத் சாரின் ரசிகர்களிடம் கூறும் தருணம் இது என்று நினைக்கிறேன். அனைத்து ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்