< Back
சினிமா செய்திகள்
Are you joining Sundar.C again? - Vishals answer
சினிமா செய்திகள்

மீண்டும் சுந்தர்.சி உடன் இணைகிறீர்களா? - விஷால் சொன்ன பதில்

தினத்தந்தி
|
31 Jan 2025 11:20 AM IST

மதகஜராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி உடன் விஷால் மீண்டும் இணைவதாக தகவல் வெளியானது.

சென்னை,

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம் 'மதகஜராஜா'. கடந்த 2013-ம் ஆண்டு உருவான இப்படம் 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 12-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம், மனோபாலா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மதகஜராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி மீண்டும் இணைவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னை காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால், மீண்டும் சுந்தர்.சி உடன் இணைகிறீர்களா? என்கிற கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'கூடிய சீக்கிரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ' என்றார்.

விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் வெளியான 'மதகஜராஜா, ஆம்பள, ஆக்சன்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்