< Back
சினிமா செய்திகள்
தவறான தகவல்கள் பரவுவது வேதனையளிக்கிறது - ஏ.ஆர்.ரகுமான் மகன்
சினிமா செய்திகள்

தவறான தகவல்கள் பரவுவது வேதனையளிக்கிறது - ஏ.ஆர்.ரகுமான் மகன்

தினத்தந்தி
|
22 Nov 2024 6:36 PM IST

ஆதாரமற்ற பொய்யான சில வதந்திகள் பரவுவதை பார்க்கும்போது மனமுடைகிறது என்று ஏ.ஆர்.ஆர்.அமீன் கூறியுள்ளார்.

சென்னை,

ஏ. ஆர்.ரகுமானுடனான 29 ஆண்டுக்கால திருமண வாழ்வை முறித்துக்கொள்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தது தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ரகுமானும் இது குறித்து, "நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம். இந்த உடைந்த சாப்டரை நாங்கள் கடந்து செல்வதற்கு எங்களின் ப்ரைவசிக்கு மரியாதை கொடுக்கும் நண்பர்களின் அன்புக்கு நன்றி என்று தனது சமூக வலைதள பக்கம் மூலம் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், சிலர் ஏ.ஆர். ரகுமான் சாய்ரா பிரிவு குறித்து வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்தனர். 'ரகுமான்- சாய்ரா' இருவரின் தனிப்பட்ட விஷயம் குறித்து தவறான தகவல்களை விஷமாகப் பரப்பினர். மேலும், ஏ.ஆர். ரகுமானுடைய கிட்டாரிஸ்ட் ஒருவரும் அவருடைய கணவருடனான விவாகரத்தை அறிவித்ததைத் தொடர்புப்படுத்தி விஷமத்தனமான வதந்திகளைப் பரப்பினர். இது குறித்து ஏ.ஆர். ரகுமானின் ரசிகர்கள் வதந்திகளைக் கடுமையாகக் கண்டித்து, அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மகன் அமீன் இன்ஸ்டாவில் கூறியதாவது:-

என் அப்பா ஒரு லெஜண்ட். தன் படைப்புகளால் மட்டுமல்ல... பண்பு, அன்பு, மரியாதை என அனைத்தினாலும் ஒரு லெஜண்ட்டாக இருக்கிறார். அவரைப்பற்றி இப்படி அடிப்படை ஆதாரமற்ற, தவறான தகவல்கள் பரவுவது வேதனையளிக்கிறது. இன்னொருவர் வாழ்க்கையை பற்றி பேசுகையில், அதில் உண்மையும் மரியாதையும் இருக்கவேண்டும் என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். தவறான தகவல்களை பரப்புவதை தயவுசெய்து ஊக்குவிக்காதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

தன் பெற்றோர் விவாகரத்துக்கும், பேஸிஸ்ட் மோகினி டே விவாகரத்துக்கும் தொடர்பிருப்பதாக பரவிய வதந்திகளை குறிப்பிட்டு, ஏ.ஆர்.ஆர்.அமீன் இன்ஸ்டாவில் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்