'ஏ.ஆர். ரகுமான் ஒரு சாதாரண மனிதர்தான், ஆனால்...'- பாலிவுட் பாடலாசிரியர் பேச்சு
|சமீபத்தில் அஜய் தேவ்கன் நடித்த 'மைதான்' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
சென்னை,
இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர். ரகுமான். இசைக்காக ஆஸ்கர் விருது வென்ற இவருடன் பணியாற்ற வேண்டும் என்பது பலரது கனவாக இருக்குறது. சமீபத்தில் அஜய் தேவ்கன் நடித்த 'மைதான்' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில், அப்படத்தில் அவருடன் பணிபுரிந்தது பற்றி பிரபல பாலிவுட் பாடலாசிரியர் மனோஜ் முன்டாஷிர் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'நான் ஏ.ஆர்.ரகுமானை நேருக்கு நேர் சந்தித்தது இதுவே முதல் முறை. அவர் மிகவும் சாதாரணமான மனிதராகவே இருந்தார். அவர் அப்படி இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அது அவர் பியானோவில் உட்காரும் வரைதான்' என்றார்.
அஜய் தேவ்கன் நடித்த 'மைதான்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், "டீம் இந்தியா ஹை ஹம்" மற்றும் "மிர்சா" போன்ற பாடல்கள் ஹிட் ஆகின.