ரூ.5 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அனுஷ்கா... இதுதான் காரணமா?
|நடிகை அனுஷ்கா தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் 20 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா. பாகுபலி படத்துக்கு பிறகு பான் இந்தியா நடிகையாகவும் உயர்ந்தார். அனுஷ்காவுக்கு திடீரென்று உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தது. எடையை குறைக்க கடும் உடற்பயிற்சிகள் செய்தார்.
சிறிய இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'மிஸ் செட்டி மிஸ்டர் போலி செட்டி' படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது ஒரு தெலுங்கு படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் வித்தியாசமான கதை அம்சத்தில் தயாராகிறதாம்.
சில தினங்களுக்கு முன்பு முன்னணி தெலுங்கு நடிகரின் படத்தில் நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. ரூ.5 கோடி சம்பளம் தருவதாகவும் பேசி உள்ளனர். ஆனால் அதில் நடிக்க அனுஷ்கா மறுத்து விட்டார். அந்த படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததால் நடிக்க மறுப்பு சொன்னாராம், ரூ.5 கோடி பட வாய்ப்பை அனுஷ்கா நிராகரித்த தகவல் வலைதளத்தில் வைரலாகிறது.