< Back
சினிமா செய்திகள்
Andrew Garfield responds to reports of him starring in Spider-Man 4
சினிமா செய்திகள்

'ஸ்பைடர் மேன் 4' ல் நடிப்பதாக வெளியான தகவல் - பதிலளித்த ஆண்ட்ரூ கார்பீல்ட்

தினத்தந்தி
|
4 Jan 2025 12:48 PM IST

ஸ்பைடர் மேன் நோ வே ஹோமில் கேமியோ ரோலில் நடித்திருந்த ஆண்ட்ரூ கார்பீல்ட், ஸ்பைடர் மேன் 4-ல் நடிப்பதாக தகவல் பரவி வந்தது.

சென்னை,

இந்தியாவில், ஹாலிவுட் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக, மார்வெல் படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் மார்வெல் படைப்புகளுள் ஒன்றாக உருவானதுதான், ஸ்பைடர் மேன் படங்கள்.

இதன் முதல் பாகமான ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங்கில் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடித்திருந்தார், அதனைத்தொடர்ந்து, ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹோம் படமும், கடைசியாக 3-வது பாகமாக ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படமும் வெளியாகின. இப்படங்களில் கதாநாயகியாக ஜெண்டயா நடித்திருந்தார். இந்த 3 பாகங்களையும் ஜான் வாட்ஸ் இயக்கி இருந்தார்.

இதனையடுத்து 4-வது பாகமும் உருவாகி வருகிறது. இதிலும், டாம் ஹாலண்டே ஸ்பைடர் மேனாக நடிக்கிறார். மேலும், ஸ்பைடர் மேன் நோ வே ஹோமில் கேமியோ ரோலில் நடித்திருந்த ஆண்ட்ரூ கார்பீல்ட், இதிலும் நடிப்பதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது.

அதற்கு ஆண்ட்ரூ கார்பீல்ட் தற்போது பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ' நான் என்ன சொன்னாலும் இப்போது யாரும் நம்பப்போவதில்லை. நான் அனைவரையும் ஏமாற்றப்போகிறேன் ' என்றார்.

மேலும் செய்திகள்