< Back
சினிமா செய்திகள்
Ananya Panday looks fierce as a lawyer in Kesari Chapter 2. Check out first look
சினிமா செய்திகள்

'கேசரி சாப்டர் 2' - அனன்யா பண்டேவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

தினத்தந்தி
|
29 March 2025 7:40 AM IST

இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

கரண் சிங் தியாகி இயக்கத்தில் அக்சய் குமார் மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ள படம் 'கேசரி சாப்டர் 2: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் ஜாலியன் வாலா பாக்'. இதில் நடிகை அனன்யா பண்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் சி. சங்கரன் நாயரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது. ஜாலியன் வாலா பாக் படுகொலை பற்றிய உண்மைகளை வெளிக்கொணர சி.சங்கரன் நாயர் பிரிட்டீஸ் ராஜ்ஜியத்திற்கு எதிராக போராடினார். இந்த கதை மையமாக வைத்து தர்மா புரொடக்சன்ஸ், கேப் ஆப் குட் பிலீம்ஸ் மற்றும் லியோ மீடியா கலெக்டிவ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்துள்ளன.

இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அனன்யா பாண்டேவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் அவர் 'டில்ரேட் கில்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்