< Back
சினிமா செய்திகள்
மீண்டும் தாயாகிறார் நடிகை எமி ஜாக்சன்
சினிமா செய்திகள்

மீண்டும் தாயாகிறார் நடிகை எமி ஜாக்சன்

தினத்தந்தி
|
1 Nov 2024 3:53 PM IST

நடிகை எமி ஜாக்சன் மீண்டும் தாயாகவுள்ளதை புகைப்படங்கள் மூலம் அறிவித்திருக்கிறார்.

லண்டனை சேர்ந்தவர் எமி ஜாக்சன். தன்னுடைய 17 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்து பின்னர் அழகி போட்டியிலும் கலந்து கொண்டவர். மிஸ் இங்கிலாந்து போட்டியில் கலந்து கொண்ட எமி ஜாக்சன், இரண்டாவது இடம் பிடித்தார்.

தமிழில் 'மதராசபட்டினம்' படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி உள்பட படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் வெளியான 'மிஷன் சாப்டர் 1' திரைப்படம் வெளியானது.


இதற்கிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை எமி நிச்சயதார்த்தம் செய்தார். இவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் எனவும் பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஆனால், திருமணத்திற்கு முன்பாகவே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின் எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார். பின், கடந்த ஆகஸ்ட் மாதம் எட் வெஸ்ட்விக்கை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், தற்போது எமி ஜாக்சன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள தகவலை இரண்டாவது கணவர் எட் வெஸ்ட்விக்குடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்